Tuesday, November 8, 2011

மேகம் பொய்த்தது!

Note: It's been ages since I wrote in Tamil or updated my Tamil Blog.. (that's my way of saying please ignore spelling mistakes!) Thought it makes more sense to stick on to one place for all the ramblings, jottings and outbreaks! 

---------------------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------------------

அவள்: இனிக்கு weather ஒரு மாதிரி இருக்கு-ல?
அவன்: ஏன்? எழுந்துக்கவே மனசு வரல-னு சொல்றியா?
அவள்: இல்ல, நான் மட்டும் தான் வீட்டுல தனிய இருக்கேன்-னு சீக்கிரமே எழுந்துட்டேன், வெளில வந்து பார்த்தா ஒரே இருட்டிண்டு, மேகமூட்டமா இருக்கு! ரெண்டு நாளாவே மழை வரும்-னு பார்த்து வெளில போகாம வீட்டுலையே இருந்துட்டேன் வேற... இனக்கு அம்மா ஏதோ meeting-க்காக Bangalore போயிருக்கா... night-க்குள்ள வந்துட்டா நல்லா இருக்கும்!
அவன்: ம்ம்ம்ம்ம்ம்.... பயம் போல!
அவள்: நெஜம்மா பா.. பயம்-னு இல்ல.. ஒரு மாதிரி இருக்கு... that's all :)
அவன்: இந்த மாதிரி climate-க்கு-னு ஒரு அழகு இருக்கு... மரம்-லாம் என்னிக்கும் இல்லாத பச்சையா தெரியும், எதிர் வீடு இனிக்கு தான் கட்டினா மாதிரி பள்ளிச்சுனு இருக்கும், வானத்துல கருப்பு colour ஒரு welcome change-ஆ இருக்கும்...
அவள்: நீ பாட்டு சொல்லிண்டே போ...ஆனா, இங்க நான் யோசிக்கற விதமே வேற... பார்க்க எவ்ளோ அழகா இருக்கோ, அதே அளவுக்கு silent-ஆ இருக்கு! ரசிக்கனம்-னு ஆசை தான், ஆனா....

---------------------------------------------------------------------------------------------------------------------------------

அவன்: hello!
அவள்: hello! நான் தான்...
அவன்: என்ன திடீர்-னு chat-லேர்ந்து log-off பண்ணிட்டே!
அவள்: current போச்சு, இதுலே பேசலாம், பிரச்சனை இல்ல..
அவன்: current போச்சா? ரொம்ப நல்லா இருக்குமே இப்போ! சரி அத விடு, வேற எதாவது பேசலாம்! இப்படி பேசற chance அடிகடி கிடைக்காது!
அவள்: என்னமோ சொல்லு.. hey..  எனக்கு உன்ன இப்போ பார்க்கனம் போல இருக்கு... வீட்டுக்கு வரட்டுமா? Aunty கிட்டயும் phone-ல தான் பேசிருக்கேன், பார்த்தா அவங்களும் சந்தோஷப்படுவாங்க-ல?
அவன்: இனிக்கு வேணாம், நீ இப்போ பேசு, evening வெளில போலாம், plan பண்ணிட்டு சொல்றேன். 
அவள்: ம்ம்ம்... 
அவன்: நெஜம்மா, சரி... அத விடு, என்ன சாப்ட்டே? என்ன பண்ணே?
அவள்: பெரிசா ஒன்னும் பண்ணல, அம்மா இட்லி வெச்சுட்டு போயிருந்தா, அத சாப்ட்டேன்...

---------------------------------------------------------------------------------------------------------------------------------

அவர்: யாரு மா நீ?
அவள்: Gautham இருக்காரா?
அவர்: இங்க யாரும் அப்படி இல்லையே!
அவள்: இந்த address தானே கொடுத்தார்! நான் கூட அவரோட வந்திருக்கேனே..
அவர்: ஏதோ தப்பான address-க்கு வந்திருக்கே மா... மழை வரா மாதிரி இருக்கு... சீக்கிரம் வீடு போய் சேறு!
அவள்: இப்போ தான் அவரோட பேசிண்டு இருந்தேன், phone battery போச்சு, மனசு சரி இல்ல, பார்த்தே ஆகணம்-னு வந்தேன்... உங்க போன் தாங்களேன், ஒரு call பண்ணி check பண்ணிடறேன்...
அவர்: இந்தா மா, சீக்கிரம் பேசிட்டு வெய்... என் time-அ waste பண்ணாதே!
அவள்: thank you sir. just 2 minutes.
அவர்: என்ன மா? ring போகுதா?
அவள்: number does not exist-னு வருது!?!?!?
அவர்: ?!?!?!

--------------------------------------------------------------------------------------------------------------------------------

அம்மா: Gayathri, தூங்கினது போதும், 10 மணி ஆச்சு, எழுந்திரு, சுட சுட இட்லி பண்ணி வெச்சிருக்கேன், சாப்ட்டுக்கோ, நான் evening first flight-ல வர try பண்றேன்! 

--------------------------------------------------------------------------------------------------------------------------------